நோக்கியா நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது, மேலும் இந்த டிவியானது ப்ளிப்கார்ட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5.3 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவியானது ரூ. 41,999 என்ற விலைக்கு விற்பனையானது, இந்த டிவியானது எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது மீண்டும் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இணைந்து புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்மார்ட் டிவி ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், இன்டெலிஜென்ட் டிம்மிங், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ போன்ற அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.
மேலும் நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்டிவியானது கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் ஏற்கனவே நோக்கியாவின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியானது வரவேற்பினைப் பெற்ற அளவு, நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவியும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.