நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலானது இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
1. நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் – ரூ. 6,999
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் ஆனது 5.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கை ரேகை சென்சார் கொண்டுள்ளது.
இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் இது, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாய் இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா போன்ற இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.