Mobile

விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலானது இந்தியாவில் 2019 ஆம்  ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

  1.  நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் –  ரூ. 6,999
விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

இந்த விலைக் குறைப்பானது அமேசான் தளத்தில் தற்போது அமலில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,990 ரூபாய்க்கு வெளியாகி பல கட்டங்களாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 3 ஜி.பி. ரேம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது. அதேபோல் கேமராவினைப் பொறுத்தவரை, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 8 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு!!!

TechNews Tamil

விவோ வி15 ப்ரோ மீது ரூ.5000 விலைக்குறைப்பு!

TechNews Tamil