Mobile

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவினைப் பொறுத்தவரையில் 6.39′ இன்ச் 720 x 1560 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் சிப்செட் வசதியினைப் பொறுத்தவரையில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டு வசதியினைக் கொண்டுள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டிருக்கும்.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 10W சார்ஜிங் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குவதாக உள்ளது.

Related posts

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள Realme X2!

TechNews Tamil

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்!!

TechNews Tamil