Mobile

இந்தியாவில் களம் இறங்கியது நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது Dusk, Fjord மற்றும் Charcoal போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

மேலும் சிறப்பு அம்சமாக எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளது. நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் 45000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத், ஜிபிஎஸ் + க்ளோனாஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகியது ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் களம் இறங்கியுள்ள மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil