Mobile

ரூ.2,200 கேஷ்பேக் சலுகையுடன் விற்பனைக்கு வந்த நோக்கியா 2.3!

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ நிறுவனம் ரூ.2,200 கேஷ்பேக் சலுகையினை வழங்குகிறது. மேலும் HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக்கினை வழங்குகிறது.

  1. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 8,199

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ரூ.2,200 கேஷ்பேக் சலுகையுடன் விற்பனைக்கு வந்த நோக்கியா 2.3!

 மேலும் இது  2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம் வசதி மற்றும் 32 ஜி.பி. உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

TechNews Tamil

Samsung Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு அப்டேட்!!

TechNews Tamil