Mobile

நோக்கியா 2.3 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு களமிறங்க வாய்ப்பு!!

சமீபத்தில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் எகிப்தில் அறிமுகமானது. மலிவு விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிறுவனம் தற்போது இந்திய வெளியீட்டிற்கு திட்டமிட்டுள்ளது, மேலும் இது கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகலாம் என்று கருத்துக் கணிப்பு நிலவி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 8,625 என்பதால் பலரும் இதுகுறித்த வெளியீட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர்.

நோக்கியா 2.3 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு களமிறங்க வாய்ப்பு!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது  2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம் வசதி மற்றும் 32 ஜி.பி. உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது குவாண்டம் சிப் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ஐந்தாவது ஆண்டு விழா: ரெட்மி ஸ்மார்ட்போன், டிவிக்கு விலை குறைப்பு!

TechNews Tamil