Mobile

ஜிஎஸ்டி காரணமாக விலை உயர்த்தப்பட்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!

ஜிஎஸ்டி 6 சதவீதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் விலையினை அதிகரித்துள்ளது.

  1. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.7,199
  2. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் புதிய விலை- ரூ.7,585

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர் ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி காரணமாக விலை உயர்த்தப்பட்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி கேமரா போன்றவற்றினையும், முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

போட்டோகிராபி பிரியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil