Mobile

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 8,199
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

 மேலும் இது  2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம் வசதி மற்றும் 32 ஜி.பி. உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

தற்போது Twilight Orange நிறத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நேற்று விற்பனையினைத் துவங்கிய ரியல்மி 5!!

TechNews Tamil