ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான நோக்கியா சிறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் புதிய நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது.
நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் வகையின் விலை – ரூ. 6,200
இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் ஆனது 6.0 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும், மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி போன்றவற்றைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாவதால் பலரும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போன் குறித்த இணைப்பு ஆதரவுகள், பேட்டரி, பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பிற தகவல்கள் விரைவில் வெளியாகும்.