Mobile

சர்வதேச சந்தையில் அறிமுகமானது நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா நிறுவனத்தின் 1.3  ஸ்மார்ட்போன் ஆனது இன்று சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

1.       நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை – ரூ. 7575

இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் ஆனது  5.7 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது  1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

சர்வதேச சந்தையில் அறிமுகமானது நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது அட்ரினோ 308 GPU வசதியினைக் கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது  1 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது  ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 3.5 எம்.எம். ஜாக், எஃப்.எம். ரேடியோ, கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் போன்றவற்றினையும், இணைப்பு ஆதரவாக 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

சாம்சங் Galaxy A50 இன் சிறப்பம்சங்கள்

TechNews Tamil

சாம்சங் Galaxy A30s அசத்தலான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil