நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் நாய்ஸ் கலர்ஃபிட் நாவ் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த பிராண்ட் நாட்டில் நாய்ஸ் கலர்ஃபிட் நாவ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது காமோ கிரீன் மற்றும் ஸ்டீல்த் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
நாய்ஸ் கலர்ஃபிட் நாவ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.4′ இன்ச் கொண்ட எல்சிடி தொடுதிரை டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டச் டிஸ்பிளே உடன் 320 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆகும். மேலும் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் நாவ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடனம், பூப்பந்து, யோகா, ஓட்டம் மற்றும் வலிமை பயிற்சி போன்ற 10 அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
மேலும் இது கிளவுட் அடிப்படையிலான வாட்ச் பேஸ் தீம்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் நாவ் ஸ்மார்ட்வாட்ச் ஐடி, டெக்ஸ்ட் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன் மற்றும் இசை பின்னணி கட்டுப்பாட்டினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் சான்று கொண்டதாகவும், 24/7 இதயத் துடிப்பு கண்காணிப்பு அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.