அமெரிக்காவில் உள்ள விமானங்களில் பயம் செய்வோர், ஆப்பிள் லேப்டாப்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலை கொண்ட இந்த லேப்டாப்பை பெரும்பாலும் அனைவரும் வாங்கிப் பயன்படுத்துவதை கனவாகக் கொண்டிருப்பர்.
தடை விதிக்க காரணம் தான் என்ன? என பலரும் பகேள்வி எழுப்பியுள்ள நிலையில், பேட்டரிகளில் குறை இருப்பதால்தான் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஆப்பிள் நிறுவனத்தாலே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தத் தடையினை அமலுக்கு கொண்டு வரவில்லை, நான்கு விமான நிறுவனங்கள் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதித்து இருக்கின்றன.

அதுவும் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளியான லேப்டாப்புகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2017 வரை விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை மட்டுமே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
15-இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்கள் அதிக சூடாகும் என்பதால்தான் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.