இதயத்தின் துடிப்பைக் கணக்கிட ஆப்பிள் போன் போதும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகணும்.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா நகரத்தில் நடு ரோட்டில் மயங்கிய விழுந்த நபருக்கு சிகிச்சை அளிக்க இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் ஹாங்காங்கிலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாடுகளில் ஈசிஜியை விட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 எளிதான முறையாகக் கருதப்படுவதோடு, துல்லியமான அளவீடாகக் கருதப்படுகிறது.

வளர்ந்து வரும் நவீன உலகில் இது மிக மிக அத்தியாவசியமான ஒன்று என்று கூறி வருகின்றனர் மருத்துவ நிபுணர்கள். மிகத் துல்லியமாக கணக்கிட வேண்டிய இடங்களில் ஈசிஜியை விட இதனைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஹாங்காங்கில் நோயாளியை ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது பரிசோதிக்க, ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது.
அதில் சற்று சோககரமான விஷயம் யாதெனில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இன்னும் இந்தியாவில் வெளிவரவில்லை என்பதுதான்.