டெலிகாம் டாக் வலைதளத்தின்படி, பிஎஸ்என்எல் திட்டங்களின் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் ஆனது நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.1,699/- ஆகியவைகள் இனிமேல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்காது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பயனர்களுக்கு தினமும் 250 நிமிட இலவச வெளிச்செல்லும் நிமிடங்கள் மட்டுமே அணுக கிடைக்கும். அதாவது ஒரு பயனரால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்க்கான இலவச அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அர்த்தம்.

குறிப்பிடப்பட்டுள்ள 250 நிமிடங்கள் என்கிற தினசரி வரம்பு முடிந்ததும், பயனர்களுக்கு அடிப்படை கட்டணத்தின்படி அழைப்புகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது வினாடிக்கு 1 பைசா என்கிற விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வரம்பானது நள்ளிரவு வரை இருக்கும், அதன் பிறகு தினசரி வரம்பு மீட்டமைக்கப்படும். இலவசமாக கிடைக்கும் 250 நிமிடங்களை நீங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், அது அடுத்த நாளுக்கு முன்னோக்கி செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
அழைப்பு நன்மைகளுக்கான விகிதங்களை முற்றிலுமாக அகற்றி, வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்கிய முதல் டெலிகாம் ஆப்ரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ ஆகும். வேறு வழியில்லாமல், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களையும் அதை பின்பற்ற வேண்டியதாகிற்று. இப்போது பி.எஸ்.என்.எல் அதை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.