பிளிப்கார்ட் கடந்த வியாழக்கிழமை பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கை அகற்ற, மார்ச் 2021 லிருந்து 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத பொருட்களையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2019 வரை 25 சதவீதம் பிளாஸ்டிக் அளவினைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் என்விரான்ட்மெண்டல் பேப்பர்களை அறிமுகப்படுத்துதல், பாலிதின் பைகளுக்கு பதிலாக காகித பைகள், ஏர்பேக்குகளை அட்டைப்பெட்டி கழிவு துண்டாக்கப்பட்ட பொருள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யவுள்ளது.

மேலும் மற்ற நிறுவன்ங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கவும் மறுசுழற்சி அமைப்பை உருவாக்க அறிவுறுத்தியதோடு, பிளாஸ்டிக்கில் மறுசுழற்சி செய்வதனை முன்னுதாரணமாக கொண்டு விளங்கப் போவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
இதனால் 2021 காலகட்டத்திற்குள் “ஈகாம் ரெடி பேக்கேஜிங்” திட்டத்தில் சுழற்சி செய்யப்பட்ட காகித பைகளின் பயன்பாடு ஆகியவை குறைக்கப்பட்டு, பிளாஸ்டிக் இல்லாமல் ப்ளிப் கார்ட் நிறுவனமானது இயங்கி, மற்ற நிறுவன்ங்களுக்கு முன்னோடி என்ற பெயரினை எடுக்க பேரார்வம் காட்டி வருகிறது.
இந்த வகையான பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான மாற்று வழிகளை உருவாக்குவது ஒரு சிறந்த செயலாகும், அரசின் வழி நின்று, இதற்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவெடுத்ததுடன், அதனை நனவாக்க வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறது ப்ளிப்கார்ட்.