தற்போதுவரை iOS 8 என்ற ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் இயங்கிவரும் வாட்ஸ்ஆப் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி க்குப் பின் அந்த ஓஎஸ்சில் இயங்காது, அது குறித்த அதிகாரப் பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 2.3.7 & அதற்கும் பழைய பதிப்புகளின் கீழான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது. இவர்களுக்கான கெடு தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை மட்டுமே ஆகும்.

அதன்பின்னர் புதிதாக அக்கவுண்ட்களை உருவாக்கவும் முடியாது, அதேபட்சத்தில் ஏற்கனவே உள்ள அக்கவுண்டையும் பயன்படுத்தவும் முடியாது. வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த iOS 9 அல்லது அதற்கு பிறகு வெளியான ஓஎஸ் பதிப்பிற்கு மாறவேண்டும்.
இது பயனர்கள் பலருக்கும் அதிர்ச்சிகரமான தகவலாகும். கெடு காலம் முடிவதற்குள் அப்டேட் செய்ய தொடர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.