வாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.
கடந்த சில வருடங்களாக வாட்ஸ் ஆப்பின் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் தற்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரத்தினை ஒளிபரப்ப முடியாது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கூறியுள்ளார்.
இதன் மூலம் வணிக முதலாளிகள் அதிருப்தியில் உள்ளனர். அதாவது வாட்ஸ்அப் மொபைல் போன் நம்பர்களை ஃபேஸ்புக்குடன் இணைத்து, வாட்ஸ்அப் அக்கௌவுண்ட்களில் விளம்பரங்களை பதிவிடலாம் என்று கூறியது.

ஆனால் பேஸ்புக் நிறுவனம், தற்போது இந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
பயனர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேற இது வழிவகுக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கணித்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் நிறுவனம் 4 மாதங்களுக்கு முன்னர், தனது செயலியில் விளம்பரங்களை வழங்க நியமிக்கப்பட்டு இருந்த குழுவை களைத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் செயலியின் குறியீடுகளில் இருந்து விளம்பரங்களை சேர்க்கும் குறியீடுகளை நீக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல் உறுதிப்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.356 பதிப்பில் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை சேர்க்க செய்யும் குறியீடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.