Mobile

ரோக் போன் 3 இன் புதிய வேரியண்ட் இத்தாலியில் அறிமுகம்!!

அசுஸ் நிறுவனம் ஜூலை மாதம் இத்தாலியில் ரோக் போன் 3 கேமிங் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, அதனைத் தொடர்ந்து அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் ஆனது.

தற்போது ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் (2340×1080 பிக்சல்கள் தீர்மானம்) AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

ரோக் போன் 3 இன் புதிய வேரியண்ட் இத்தாலியில் அறிமுகம்!!

அசுஸ் ரோக் போன் 3  ஆனது 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் அட்ரினோ 650 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி,  12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ கொண்டதாகவும், கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா,  5 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில்  24 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப்-சி,  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 6000 எம்ஏஹெச் பேட்டரியினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் களம் இறங்கும் ஒப்போ ஏ93 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விறுவிறுப்பான விற்பனை: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4000 தள்ளுபடி!!

TechNews Tamil

5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil