ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்டாக ஜியோ நிறுவனத்தின் VoWiFi ஆதரவு கிடைத்துள்ளது.
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3800எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை 3800எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.