உலகில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு ஆப் தான் வாட்ஸ்ஆப், அவ்வப்போது அதில் புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. இப்போது வந்திருக்கும் புதிய அப்டேட் என்ன என்று கேட்கிறீர்களா? ஃபிங்கர் பிரின்ட் லாக் தான் அந்த புதிய அம்சம்.
இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உங்கள்
ஸ்மார்ட்போனில் இந்த அம்சத்தை செயல்படுத்த, Android பீட்டா பதிப்பு 2.19.221-ஐ வைத்திருக்க வேண்டும்.
சோதனைக்கு உட்படுத்தப்படும் புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை
பற்றிய துல்லியமான தகவல்களை வழங்கும் WABetainfo-வின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சத்தை பெற உங்கள் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.

ஒருவேளை இருப்பது பீட்டா பதிப்பிலான வாட்ஸ்ஆப் தான் என்றால், இந்த அம்சத்தை இயக்க, பின்வரும் வழிமுறைகளை
பின்பற்ற வேண்டும்: Settings>Account>Privacy>Fingerprint lock சென்று எனேபிள் செய்ய வேண்டும்,
இந்த அம்சத்தை செயல்படுத்திய பின்னர் வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை
எடுக்க, அன்லாக் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் மெசேஜ் ரிப்ளையை
பொறுத்தவரை, வழக்கம் போல வாட்ஸ்ஆப்பிற்குள் நுழையாமலேயே பதில் அளிக்கலாம்.
இந்த Fingerprint lock அம்சமானது, எப்போதெல்லாம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும்
விருப்பமும் பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.