Apps

கிரெடிட் கார்ட், லோன் பெற அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்

சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப் தற்போது புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகியுள்ளது. இந்த செயலியை அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட் அப்ளை செய்வது, லோன் பெறுவது ஆகியவை பைசாபஜார் மூலம் எளிமையாகிறது.

சாம்சங் செயலி மூலம் பைசாபஜார் இணையதளத்தில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் லோன் மற்றும் கிரெடிட் கார்ட் வழங்குவதற்கான அப்ரூவல் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சாம்சங் செயலி ஒருசில அப்டேட்டுக்களை செய்து பொருளாதார பரிமாற்றத்திற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேலும் பயனர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அப்டேட்டுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் காரணமாக ஆன்லைன் பயனாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி மேலும் சில பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது 

கிரெடிட் கார்ட், லோன் பெற அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்



இதேபோல் மேலும் சில வசதிகளை பின்னாளில் அறிமுகம் செய்யவே சாம்சங் நிறுவனத்தின் செயலியுடன் தங்கள் நிறுவனம் இணைந்து பொதுமக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க உதவும். 


இந்த வசதியை பெற நீங்கள் வாங்கும் அல்லது ஏற்கனவே வாங்கியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் முதலில் சாம்சங் பே செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தும் முன்னர் உங்களுடைய கண்பார்வை அல்லது பிங்கர் பிரிண்ட்டை பதிவு செய்ய வேண்டும்.

அதனையடுத்து பாதுகாப்பு பின் நம்பரையும் நீங்கள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய கிரெடிட் கார்டை இந்த செயலியுடன் இணைத்து கொள்ளலாம். இந்த கிரெட்டிட் கார்டு வெரிஃபை செய்யப்பட்டவுடன் உங்களுடைய அனைத்து தேவைகளையும் இதன்மூலம் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம் 


Related posts

அமேசான் ப்ரைம் தினத்தை முன்னிட்டு இவ்வளவு சலுகைகளா?

TechNews Tamil

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

TechNews Tamil

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி அறிமுகம்!!

TechNews Tamil