ரியல்மி நிறுவனம் தற்போது அதன் ரியல்மி 3 ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது புதிய அப்டேட்டுடனான இந்த ஸ்மார்ட்போன் RMX1821EX_11.A.28 என்ற புதுப்பிப்பு பதிப்பு எண்ணுடன் வருகிறது.
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

மேலும் இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி கொண்டுள்ளது.
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இது, பின்புறத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியினையும், முன்புறத்தில் 13எம்பி, 2எம்பி டூயல் ரியர் கேமராவினையும் கொண்டுள்ளது.
மேலும் இது 4230எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.