போட் ஏர்டோப்ஸ் நிறுவனம் மலேசியாவில் 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை வெளியிட்டு உள்ளது. 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது இன்ஸ்டா வேக் என் பேர், ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், மல்டி-பன்ஷன் பட்டன் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
மேலும் ஏர்டோப்ஸ் 131 இயர்பட்ஸின் எடையானது 3.5 கிராம் எடை கொண்டதாக உள்ளது, மேலும் இது 13 எம்எம் டிரைவர்கள் கொண்டதாகவும், தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குவதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை கேசில் 650 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.
மேலும் போட் ஏர்டோப்ஸ் 131 ஆக்டிவ் பிளாக், மிட்நைட் புளூ மற்றும் செர்ரி பிளாஸம் போன்ற நிறங்களில் கிடைக்கவும் செய்கின்றது.