ஆஃபர்களை வாரி வழங்கிவந்த ஜியோ, அதில் திடுக்கிடும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. கடந்தவாரம் வெளியான தகவலின் படி, பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுடன் பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று கூறியது.
இதனால் வாடிக்கையாளர்கள் கடுப்பாக, ஜியோ அளித்த பதில் பிற நெட்வொர்க்குகளுக்கு பேச வாடிக்கையாளர்களுக்கு பதிலாக இது நாள் வரை 13 ஆயிரம் கோடியை ஜியோ கட்டியுள்ளதாக கூறியது.

வாடிக்கையாளர்களுக்காக சில சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
- ரூ.10க்கு ரீசார்ஜ் செய்தால் 124 நிமிடங்கள் இலவசம்.
- ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடங்கள் இலவசம்.
- ரூ. 50க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் இலவசம்.
- ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 1,362 நிமிடங்களுக்கு இலவசம்.
இதனுடன் கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது ஜியோ.
- ரூ. 10க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி இலவசம்,
- ரூ. 20க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி இலவசம்,
- ரூ. 50க்கு ரீரார்ஜ் செய்தால் 5ஜிபி இலவசம்,
- ரூ. 100க்கு ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா இலவசம்.