ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அளித்து வருகிறது, அந்த வகையில் பிஎஸ்என்எல் அனைவருக்கும் பிடித்த ஒரு நெட்வொர்க்காக மாறி வருகிறது.
இவை ஒருபுறம் இருக்க, பிஎஸ்என்எல் அதிக அளவில் நஷ்டத்தினை சம்பாதித்து வருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்தது.
விருப்ப ஓய்வு திட்டத்தின்படி ஓய்வு பெறுவோருக்கு, சில சலுகைகளையும் இந்த நிறுவனம் அளித்தது

இந்த புதிய திட்டம் ஜனவரி 31ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கடந்த மாதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றனர்.
12 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட இந்த பி.எஸ்.என்.எல். ஒரு லட்சத்து 53 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இருந்தது.
ணியாளர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்ற பின்னர், தற்காலிக பணியாளர்கள் தேவையான அளவு இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதனால் வாடிக்கையாளர் சேவைகளை தீர்க்கப்படாமல் உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.