கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி ஏறக்குறைய 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது வரை சீனாவில் மட்டும் 3119 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பன்னாட்டு விமான நிலையமான சீனாவின் ஊகான் விமான நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சி அளிக்கின்றது. மேலும் சீனாவில் பல மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மாகாணங்களாக இருந்து வருகின்றன.
ஒரே வாரத்தில் புதியதாக மருத்துவமனைகள் எழுப்பப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், சிகிச்சை அளிக்க முடியாமல் சீன அரசாங்கம் தடுமாறி வருகின்றது.
மேலும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினைத் தாண்டியுள்ளது. சீனாவில் மட்டுமின்றி இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் பெரிய அளவிலான இழப்பினை சந்தித்து வருகின்றது.

சீனாவில் மேலும் பரவுவதனைத் தடுக்க, கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹெல்மெட்டினை ஒருவர் அணிந்திருக்கும்பட்சத்தில், அவரது மூச்சுக் காற்று எளிதில் பிறரைத் தாக்காத வண்ணம் அமைந்திருக்கும். மேலும் இந்த ஹெல்மெட் அணிந்திருக்கும் நபரிடம் இருந்து, பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.