சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அதாவது சோனி WH-H910N என்ற பெயர் கொண்ட ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
1. சோனி Wh-H910N வயர்லெஸ் ஹெட்போன் விலை – ரூ. 21,990
இந்த புதிய வயர்லெஸ் ஹெட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விரைவில் விற்பனையாகி வருகிறது.
அதிலும் குறிப்பிடத்தக்க அம்சமாக ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது, அதாவது இந்த வசதியின் மூலம் சுற்றுப் புறத்தில் உள்ள சத்தங்கள் குறைக்கப்பட்டு, நமக்கு தேவையான சத்தங்கள் மட்டுமே கேட்கும்.

இந்த ஹெட்போன் ப்ளூடூத் 5, ஹை-ரெஸ் ஆடியோ, LDAC, DSEE-HX, டச் கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்த ஹெட்போனில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் வசதியை கொண்டுள்ளது, இதன்மூலம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சவுண்ட் வசதியானது மாறும்.
மேலும் இதில் உள்ள குவிக் அடென்ஷன் மோட் வசதி பேசும்போது ஏற்படும் சத்தங்களைக் குறைக்க் உதவுகிறது.
இந்த ஹெட்போன் ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் 35 மணி நேரத்திற்கு பேட்டரி தாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.