Games

ஜாலி ஜாலி வந்துருச்சு.. அனைவரும் எதிர்பார்த்த புதிய கேமிங் போன்!

நுபியா ரெட் மேஜிக் 5ஜி சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

1.   நுபியா ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.40,265

2.   நுபியா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.43,430

3.   நுபியா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.46,605

4.   நுபியா ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.52,965

டிரான்ஸ்பரன்ட் வெர்ஷன்கள்:

1.   நுபியா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை-  ரூ.48,725

2.   நுபியா ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை-ரூ.55,085

ஜாலி ஜாலி வந்துருச்சு.. அனைவரும் எதிர்பார்த்த புதிய கேமிங் போன்!

புதிய நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 6.65 இன்ச் அளவிலான 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 உடன் அட்ரினோ 650 ஜி.பீ.யு கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா போன்ற கேமரா அமைப்பினை பின்புறத்தில் கொண்டு உள்ளது.

முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரெட்மேஜிக் ஓஎஸ் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் அளவிலான பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி என்எஸ்ஏ & எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

TechNews Tamil

நம்ப முடியாத விலையில் மொபைல் கேம்ஸ்!!

TechNews Tamil

தந்தையின் மருத்துவச் செலவுக்கான சேமிப்பு பணமான ரூ.17லட்சத்தை பப்ஜியில் செலவிட்ட இளைஞர்!!

TechNews Tamil