இந்தியாவில் ஃபாசில் நிறுவனம் தனது புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது.
1. ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் டார்க் பிரவுன் லெதர் மற்றும் கொலிடர் பிளாக் சிலிகான் வெர்ஷன் வாட்ச்- ரூ.14,995
2. ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷன்- ரூ. 16,495 –
இந்த வாட்ச் தற்போது அமேசான் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இதய துடிப்பை டிராக் செய்வதாகவும், மேலும் இதன் விவரங்களானது சென்சார் மூலம் சேகரிக்கப்படுவதாகவும் உள்ளது.
மேலும் இதன் வடிவமைப்பு அதிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும்
இந்த ஹெச்.ஆர். வாட்ச் மாடல் அழைப்புகள், குறுந்தகவல்கள், நோட்டிஃபிகேஷன்களை போன்றவற்றினை காண்பிப்பதாய் உள்ளது.
மேலும் உடற்பயிற்சி மற்றும் வானிலை விவரங்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது இரண்டு வாரங்கள் வரை பேட்டரியினை தக்க வைக்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் இந்த வாட்சினைப் பொறுத்தவரை எஸ்எம்எஸ், இமெயில், அழைப்புகளை ஏற்கும் வசதி போன்றவற்றினையும் கொண்டுள்ளது. இந்த வாட்ச் ப்ளூடூத் இணைப்பினைக் கொண்டதாகவும் உள்ளது.