சமூக வலைதளங்கள் பல இருந்தாலும் இன்ஸ்டாகிராம் தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டதாக உள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் அம்சத்தினை வழங்குவதாக அறிவித்தது. தற்போது பயனர்களைக் கவரும் வகையில், இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் ஒன்றினை சோதனை செய்துவருகிறது.
அதாவது இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் மற்றொருவர் படித்துமுடித்து பின்னர், குறுந்தகவல்கள் தானாக மறைந்து போகும் என்பதே அந்த புதிய அம்சமாகும்.

இந்த புதிய சேவை ஸ்பீக் நோ ஈவில் எமோஜி என்னும் பெயர் கொண்டதாக உள்ளது.
இந்த சேவையானது தற்போது, சோதனையில் இருந்துவருகிறது. இது விரைவில் சோதனையினை முடித்து பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
இந்த சேவை பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.