ட்விட்டர் அவ்வப்போது சிறப்பு அம்சங்களை வெளியிட்டு அதன் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றது, அந்தவகையில் தற்போது பயனர்களுக்கு பயன்படும் வகையிலான ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.
அதாவது, ட்விட்டுகளை ரீட்விட் செய்யும் போது அதில், கருத்துகளையும் இனி பதிவு செய்ய முடியும் என்பதே அந்த மாற்றமாகும். உண்மையில் இது பயனர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு அம்சமாகும்.
அதாவது ட்விட்டர் பதிவின் கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்தால், பதிவை ரீட்விட் செய்தவர்களின் பட்டியலையும், அவர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளதாவது, “ட்விட்டுகளை ரீட்விட் செய்யும் போது அதில், கருத்துகளையும் இனி பதிவு செய்ய முடியும். ட்விட்டர் பதிவின் கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்தால், பதிவை ரீட்விட் செய்தவர்களின் பட்டியலையும், அவர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
.இது தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது, அதன்படி ஒரு ட்விட்டர் பதிவின் கீழ், ரீட்விட் செய்தவர்களின் எண்ணிக்கை விவரமும், கமெண்டுகளுடன் ரீட்விட் செய்தவர்கள் விவரமும் தனித்தனியாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.