Apps

ஃபேஸ்புக்கில் வந்த புதிய அம்சம்.. ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இனி இன்ஸ்டாவில் பகிரலாம்

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் உள்ளதுபோல் டார்க் மோட் அம்சத்தினை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர முடியும் என்று அறிவித்தது.

ஃபேஸ்புக்கில் வந்த புதிய அம்சம்.. ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இனி இன்ஸ்டாவில் பகிரலாம்

அந்த வகையில் பேஸ்புக் தற்போது மற்றொரு வசதியினையும் சோதனை செய்து வருகிறது. அதாவது பேஸ்புக்கில் பதிவிடப்படும் சமூக வலைதள ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே அந்த புதிய வசதியாகும்.

இந்த வசதி விரைவில் கிடைக்கும் என்றும், அதற்கான சோதனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் இது வதந்தி என்று நம்பப்பட்ட நிலையில், இந்தத் தகவலை ரிவர்ஸ் என்ஜினியர் ஜேன் மன்சுன் வொங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதாவது ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை பதிவிடும் போது, அதனை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வசதி மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்ற நிலையில், இந்த புதிய வசதியும் சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது.

Related posts

வாட்ஸ் ஆப்பை டெலிட் பண்ண சொல்லும் டெலிகிராம் ஆப்பின் நிறுவனர்!!

TechNews Tamil

இலவசமாக நெட்பிளிக்ஸினைப் பயன்படுத்தலாம்… பயனர்கள் மகிழ்ச்சி!!

TechNews Tamil

பாதுகாப்பின்மை அபாயம்:: ஃபேஸ்புக்கின் 267 மில்லியன் கணக்குகளின் சுய தரவுகள் விற்பனை!!

TechNews Tamil