கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 69 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பல லட்சக்கணக்கிலான மக்கள் உயிர் இழந்துள்ள நிலையில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, தற்போது 3 மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தளர்த்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாத் தொற்று அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பலவிதமான சேவைகளையும் இந்திய அரசாங்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் சரி, அதன்பின்னரும் சரி ஏடிஎம் மிஷின் சார்ந்த பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஏடிஎம்மில் எத்தனை முறை வேண்டுமானால் பணம் எடுக்கலாம், வீட்டுவாசலில் ஏடிஎம், ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் எனப் பல வசதிகள் வந்தன.

இருப்பினும் அதன் மூலம் கொரோனா வைரஸும் தீவிரமாகப் பரவி வந்தன, இதனால் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதிகளை ஒரு சில வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன.
அதாவது கார்டு அல்லது பின் நம்பரை பயன்படுத்தாமல் செல்போனில் வங்கிகளின் செயலியை டவுன்லோடு செய்து, ஏடிஎம் திரைக்கு சென்று அதில் காட்டும் கியூ ஆர் கோட்டை மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்தால், ரூபாய் எடுப்பது, இருப்புத்தொகை கண்டறிதல் என அனைத்தையும் செயலிலேயே பதிவு செய்து பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும்.