கடந்த 2015 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் அதன் WhatsApp Web வெர்ஷனை அறிமுகம் செய்தது. அதாவது ஸ்மார்ட்போனின் வாட்ஸ்ஆப் செயலியில் இடம்பெற்றிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்வதின் வழியாக கணினியில் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தது.
இந்த வசதியை அணுக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் ஆனது நமது கையிலேயே இருக்கவேண்டும் என்பதும், அது Switch On செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அத்தியாவசமான ஒன்றாகும்.

ஆம்! வாட்ஸ்ஆப், ஒரு Platform சார்ந்த பணிகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த Platform ஆனது, பயனர்களின் ஸ்மார்ட்போன் Switch Off ஆகியிருந்தாலும் கூட வாட்ஸ்ஆப் வெப்பை பயன்படுத்த அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.
WABetaInfo-வின் படி, வாட்ஸ்ஆப் ஆனது Universal Windows Platform (UWP) எனும் புதிய Multi-platform system-ல் பணியாற்றி வருகிறது. வரவிருக்கும் வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய தளமானது, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை இணையத்துடன் இணைக்காமலேயே தொடர்ந்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த அனுமதிக்கும்.
ஒருவேளை அறிமுகமானாலும் கூட Windows 10 மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த புதிய அம்சம் கிடைக்கப்பெறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
WhatsApp Web பயன்பாட்டை
மேலும் எளிமைப்படுத்தும் வண்ணம், QR Code-ற்கான ஒரு புதிய Shortcut
ஒன்றையும் வாட்ஸ்ஆப்
உருவாக்கி உள்ளது. இந்த புதிய Shortcut-ஐ Tap செய்வதின் மூலம் QR Code-ஐவிரைவாக ஸ்கேன் செய்ய முடியும். இந்த அம்சம் Android
Beta Version 2.19.189-ற்கான
Update-ல்
இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.