உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக இருந்து வருவது ஃபேஸ்புக்கே ஆகும். ஃபேஸ்புக் கணக்கு இல்லாத இளைஞர்கள் ஒருவரைக்கூட பார்க்க முடியாது.
பல லட்சம் செயலிகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தையும் மிஞ்சும் அளவு ஃபேஸ்புக் அதிக பயனர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்துகிற கொரோனா வைரஸ் குறித்து பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதேபோல் ஒவ்வொரு நாட்டின் சுகாதார அமைப்பும், மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இந்திய அரசாங்கம் போன் அழைப்புகளின் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திட்டத்தினை செயல்படுத்தத் துவங்கியுள்ளது.
தற்போது அடுத்த கட்டமாக இதுகுறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை பேஸ்புக்கில் இலவச விளம்பரமாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் பேஸ்புக்குடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் 3119 பேரின் உயிரினைப் பறித்துள்ளது.