Information Technology

இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் வேண்டும்… மத்திய அரசிடம் மனுத்தாக்கல்!!

கொரோனா தீவிரமானதன் காரணமக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது, மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கானது தற்போது மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக எந்தவொரு தொழிலும் நடைபெறாதநிலையில் பொதுமக்கள் முதல் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

வெளியே வர முடியாத இந்த சூழலில் பலரும் மன அழுத்தங்களுக்கு உட்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மன நல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகளை வழங்குகிறது.

இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் வேண்டும்… மத்திய அரசிடம் மனுத்தாக்கல்!!

அந்தவகையில்  மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்கவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, தொலை தொடர்பு மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம், இந்த காலக்கட்டத்தில் முழுவதுமாக இலவசமான சேவையினை வழங்க வேண்டும்.

அப்போதுதான் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் பெரிய அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் நிம்மதியாக இருக்க முடியும். இல்லையேல் உறவுகளுடனும், வெளி உலகத் தொடர்பு இல்லாமலும் வாழ முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

Related posts

ரூ. 49 சலுகையை ரூ. 79 சலுகையாக மாற்றிய ஜியோ!!

TechNews Tamil

செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்டுகள்.. மொத்தம் 26 லட்சமாம்!

TechNews Tamil

ஊழியர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு… ரிலையன்ஸ் அதிரடி!!

TechNews Tamil