Mobile

சீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் சீனாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இது மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும்  6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி, 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார் போன்றவற்றையும், மேலும் 16 எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Black Friday ஆஃபரில் விற்பனைக்கு வந்த Realme X2 Pro !

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil