Mobile

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் தற்போது அதன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. இந்த மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் Volcanic Grey மற்றும் Frosted Silver வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் கொண்டுள்ளது.

Related posts

ஐரோப்பாவில் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் விவோ இசெட்1 ப்ரோ.!

TechNews Tamil

அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் ரியல்மி 7i ஸ்மார்ட்போன்!

TechNews Tamil