மோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட் டி.வியினை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் ஸ்மார்ட் டி.வி. மாடல் என்பதால் டீசரையே மிகச் சிறப்பாக அனைவரையும் கவரும் வகையில், மிகக் கவனத்துடன் வெளியிட்டது.
மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட் டி.வியினை மோட்டோரோலா மட்டும் தனியாக தயாரித்து வெளியிடவில்லை என்றும், ப்ளிப்கார்ட் உடன் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது.

மேலும் அதே நாளில் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது என்ற தகவலும் உறுதியாகியுள்ளன.
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 30 வாட் முன்புற ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ட்ரூ சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ வசதி போன்றவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.