Mobile

15 வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்குகிறது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் தனது ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

1. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 1,07,400

பழைய ரேசர் ஸ்மார்ட்போன் ஆனது 2005 ஆண்டு விற்பனையானது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் 15 வருடங்களுக்குப் பின்னர் வெளியாவதால், கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

15 வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்குகிறது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இந்த மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் மற்றும்  128 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 16 எம்.பி. f/1.7 கேமரா, 5 எம்.பி. செல்பி கேமராவினைக் கொண்டிருக்கும்.

பேட்டரியினைப் பொறுத்தவரை இது  2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன்  ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil