மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் மார்ச் 16 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
1. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ. 1,07,400
இந்த மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது சர்வதேச சந்தையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் ஆனது.
மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் ஆனது, 6.2 இன்ச் QLED HD உடன் 876×2142 பிக்சல்கள் தீர்மானம் கொண்டு மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 எம்.பி. கேமரா, 5 எம்.பி. கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
பேட்டரி வசதியினைப் பொறுத்தவரை 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி வசதி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.