மோட்டோரோலா ரேசர் சாதனம் 2020 கடந்தமாதம் அறிமுகமானது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது நாளை விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தநிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக இதன் விற்பனை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1. மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் இந்திய விலை- ரூ.1,08,230
மோட்டோரோலா ரேசர் சாதனமானது 6.2 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளேவினையும், 2,142×876 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மூடும்போது 2.7 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் இது கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16MP பின்புற கேமரா, 1.22um கேமரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ், லேசர் AF, கலர் கோரேலேட்டட் டெம்பரேச்சர் மற்றும் இரட்டை LED ப்ளாஷ் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 5MP செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் போன்றவற்றினையும், பாதுகாப்பு அம்சமாக தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் உள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை 2510எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.