மோட்டோரோலா ரேசர் சாதனம் ஏப்ரல் 2 ஆம் தேதி விற்பனையினைத் துவக்க இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மே 6 ஆம் தேதி விற்பனையைத் துவக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேசர் சாதனம் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளேவினையும், மேலும் 2,142×876 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மடிக்கும்போது 2.7 இன்ச் கொண்ட டிஸ்பிளேவினையும், மேலும் 600 x 800 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இது இ-சிம் ஆதரவினைக் கொண்டிருப்பது இதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.
கேமராவினைப் பொறுத்தவரை மோட்டோரோலா ரேசர் சாதனம் 16MP பின்புற கேமிரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ், லேசர் AF, கலர் கோரேலேட்டட் டெம்பரேச்சர் மற்றும் இரட்டை LED ப்ளாஷ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில், இது 5MP செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சமாக மடிக்கக்கூடிய தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 2510எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.