Mobile

டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிடப் போவது குறித்து டீசர் மூலம் அறிவித்துள்ளது.

டீசர்மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் XT2027-1 என்ற மாடல் நம்பருடன் வெளிவரவுள்ளது.

மேலும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் 6.69 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, ஆனால் இதில் என்.எஃப்.சி. வசதி மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4 ஜி.பி. ரேம் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது 128 ஜி.பி. மெமரியினை நீட்டிக்க கூடியதாக உள்ளது.

பின்புறத்தில் 64 எம்.பி. பிரைமரி சென்சார், 8 எம்.பி. இரண்டாவது சென்சார் போன்றவையும் கொண்டுள்ளது.

செல்பிக்காக முன்புறத்தில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் பிராண்டிங் வசதியினைக் கொண்டுள்ளது.

யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

இன்று முதல் விற்பனை ஆரம்பமாகும் ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ!

TechNews Tamil

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ ஒய்51 (2020) ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil