Mobile

இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் புதிய மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. இந்தநிலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ என போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சமாக பின்புற கைரேகை சென்சார் உள்ளது.

Related posts

சீனாவில் இன்று அறிமுகமாகியுள்ளது ஹானர் 9S ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ளது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil