மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டினைக் கொடுத்துள்ளது.
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் 6.3 இஞ்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1080×2520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9609எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் மாலி ஜி72 ஜிபியு வசதி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி , 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 12எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.