Mobile

ரூ.10,390 ரூபாய் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள மோட்டரலா மோட்டோ ஈ6!

Lenovo நிறுவனத்திற்கு சொந்தமான Motorola அதன் Moto E6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ.10,390/- என்கிற விலை நிர்ணயத்தின் அறிமுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Moto E6 ஆனது ஒரு அடிப்படை மொபைலாக இருப்பதால், நுழைவு நிலை அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 18: 9 விகிதத்திலான 720 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் அளவிலான IPS LCD பேனலை கொண்டுள்ளது. 

ரூ.10,390 ரூபாய் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள மோட்டரலா மோட்டோ ஈ6!

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பதிப்புகளின்கீழ் வாங்க கிடைக்கும்: 2 ஜிபி + 16 ஜிபி அளவிலான அடிப்படை மாடல் மற்றும் விலையுர்ந்த 3 ஜிபி + 32 ஜிபி மாடல். இரண்டு மாடல்களிலும் மெமரி நீட்டிப்பிற்கான (256 ஜிபி வரை) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இடம்பெற்றுள்ளது. 


மோட்டோ இ6 ஆனது Octa-core Qualcomm Snapdragon 435 ப்ராசஸர் மற்றும் Android 9 Pie ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. Fast Charging ஆதரவு இல்லாவிட்டாலும் கூட, நீக்கப்படக்கூடிய 3000mAh பேட்டரியினால் சக்தியூட்டப்படுகிறது. 


கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் Phase detection autofocus திறன் கொண்ட f/2.0 aperture மற்றும் 1.12-micron அளவிலான pixel size கொண்ட 13MP கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் f/ 2.0 aperture மற்றும் 1.12-micron அளவிலான pixel size கொண்ட 5MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 

Related posts

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ள எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil