மோட்டோரோலாவை அடுத்து சாம்சங் நிறுவனமும் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தினாலும் இரு நிறுவனங்களும் சில சிக்கல்களை எதிர்கொண்டது.
இருப்பினும் மோட்டோரோலா நிறுவனத்தின் RAZR மாடல் தற்போது மீண்டும் மடிக்கக்கூடிய வகையில் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டோரோலா RAZR இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் செல்போன் சந்தையில் விலகியிருந்த இந்த நிறுவனம் தற்போது மீண்டும் சந்தையில் நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக மீண்டும் மடிக்கக்கூடிய செல்போனான மோட்டோரோலா RAZR என்பதை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் வெற்றி பெற்றால் மீண்டும் மடிக்கக்கூடிய தொலைபேசி சந்தை உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு புதிய சந்தையை உருவாக்கும் பொறுப்பில் தற்போது மோட்டோரோலா உள்ளது.
சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகம் செய்து ஒரு மோசமான அனுபவத்தை பெற்றது. தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பயனாளிகள் மடிக்கக்கூடிய செல்போன்களில் அதன் ஸ்க்ரீன் உடைந்து வருவதாக பெரும்பாலும் புகார் தெரிவித்தனர். ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய செல்போன்களை தயாரிக்க முயற்சி செய்து அதன் பின் தற்போது அந்த முயற்சியை தற்போது கைவிட்டுவிட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்று மீண்டும் சந்தையில் ஒரு ஜாம்பவனாக ஆக இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.