Mobile

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் 2021 சிஇஎஸ் நிகழ்வில் 4 வகையான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் மோட்டோ நிறுவனம் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்பி,  2 எம்பி பிரைமரி கேமரா, முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டதாக உள்ளது.

Related posts

வந்தது Redmi Note 6 Pro இல் MIUI 11 அப்டேட்!

TechNews Tamil

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

TechNews Tamil